ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் பொதுவான பிரச்சினைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி, நீண்ட காலமாக கலந்துரையாடி வருகிறது.
அந்த கலந்துரையாடல்களில் இணக்கம் ஏற்பட்ட விடயங்களை தொடர்ந்து செயல்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அதன்படி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற குழு அல்லது இதே போன்ற பொறிமுறையின் மூலம் பணியாற்றவும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
