பட்டதாரி நியமனத்தில் உள்ளீர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று இடம்பெற்றது.
நாடு முழுவதிலுமுள்ள 18,000க்கும் அதிகமான பட்டதாரிகளே இவ்வாறு மாவட்டம் தோறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைப் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது.
இருவேறு நிலைகளில் தமது பதவியும், சேவையும் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகளை நாளாந்தம் எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்டசெயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், பின்னர் ஊர்வலமாக வடக்கின் ஆளுனர் அலுவலகத்திற்கு சென்றனர்.
ஆளுனர் சந்திப்புக்காக ஆசிரியர் சார்பில் மூவர் அழைக்கப்பட்டு கலந்துரையாட்ப்பட்டது.
இதன்போது குறித்த பிரச்சினை தொடர்பில் தான் அவதானம் செலுத்துவதாக ஆளுனர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

