முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பான வழக்கு மஹர நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி செப்டெம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply