சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் பொலிஸாரால் மீட்பு!

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்றையதினம் (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார் எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட கார் தொடர்பில் பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வந்து காரை இங்கு விட்டுவிட்டு, சம்பத் மனம்பேரியிடம் கொடுக்குமாறு கூறிச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்ததாக கூறி சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply