யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் காங்கேசந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசந்துறை நோக்கியும், காங்கேசந்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கியும் சென்று கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசந்துறை நோக்கி பயணித்த ஏனைய இரண்டு மோட்டார் சைக்கிள் அந்த மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தின் போது 05 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
