யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (10) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 170 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply