குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்!

யாழ். தெல்லிப்பழை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை – வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதுடைய செல்வநாயகம் பாலசரஸ்பதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த வயோதிபப் பெண் நேற்றுமுன்தினம் (09) தனது வீட்டுக்கு பின்னால் தென்னை ஓலையுடன் இருந்த மிகவும் பெரிய ஒரு குளவிக்கூட்டை தட்டிப் பார்த்த வேளையில், அதில் இருந்த குளவிகள் அவர்மீது கொட்டியது.

இதனையடுத்து அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அன்று இரவு 10 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை தெல்லிப்பழை பொலிஸார் நெறிப்படுத்தியிருந்தனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply