ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வந்த கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2ஆவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்றது.
இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மாத்திரமே ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வந்த கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
