தாய் மற்றும் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் ஒரு பெண்ணும் ஆணும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டவெல, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 மற்றும் 25 வயதுடைய தாய் மற்றும் மகனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.

தாயும், மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த இளைஞன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதுடைய குறித்த சந்தேகநபர் கொலை செய்யப்பட்டவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கொலைக்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சடலங்கள் எல்பிட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply