பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், போல்சனாரோ பதவியில் இருந்து விலக மறுத்து, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணையை மேற்கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட குழுவில், 4 நீதிபதிகள் போல்சனாரோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததுடன், குற்றத்திற்காக 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply