சார்லி கிர்க் அவர்களுக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த விருது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் அவர்களுக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது.

இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்த போதும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.

சார்லி கிர்க் படுகொலைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்ததுடன் கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என காட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply