முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென் ஹாங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது இலங்கை மற்றும் சர்வதேச மட்டத்திலான அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கொழும்பில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதுவருடன் நேற்று (11) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் சீனத் தூதர் எதிர்காலத்தில் மற்றொரு பிரபல முன்னாள் அரசியல்வாதியுடனும் கலந்துரையாடல்களை நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
