தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்- சரத் வீரசேகர!

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (11) மஹிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், சந்தித்து பேசிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்சவை அரச மாளிகையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் பிரிவினைவாத தமிழ் டயஸ்போராக்களே திருப்தியடைவார்கள்.

அவர்களுக்கே இன்றைய நாள் மகிழ்ச்சியை தரும் நாளாகும். அவர்களை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச என்பவர் சாதாரண நபர் கிடையாது. முழு உலகமுமே தோற்கடிக்க முடியாது எனக் கூறிய புலிகள் அமைப்பை தோற்கடித்து 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்தவர்.

மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கிய தலைவர் அவர் .நாட்டில் அபிவிருத்திகளை எற்படுத்தினார். இப்படிபட்ட தலைவருக்கு இவ்வாறா நன்றிகடன் செலுத்துவது? – எனவும் சரத்வீரசேகர கேள்வி எழுப்பினார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply