ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் எம்பிலிபிட்டியவின் கங்கேயாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து T-81 ரக துப்பாக்கி, 97 தோட்டாக்கள், 2 மெகசின்கள் மற்றும் ஒரு இராணுவ சீருடை ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
