ஐ.தே. கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20ல் நடாத்த தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த விழாவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்கனவே 6ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கட்சியின் முகாமைத்துவ குழு, விழாவை ஒத்திவைத்தது.

அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையில் பொது இடத்தில் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply