மன்னார் போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து 2 இளைஞர்கள் நடைபயணம்!

மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் நேற்று (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர்.

மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து 2 இளைஞர்கள் கடந்த புதன்கிழமை (10) நடைபயணம் ஒன்றை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் நேற்று மாலை 6.00 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியை வந்தடைந்தனர்.

குறித்த இரு இளைஞர்களையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னார் நகரில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

பின்னர் தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குறித்த குழுவினர் நடை பயணமாக வருகை தந்து காற்றாலைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு விநியோகித்திருந்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply