இன்று முதல் தீவிரமாகும் மின்சார சபை ஊழியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை!

மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு அதாவது இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக நடத்த இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருந்தன.

அதன்படி, முதல் கட்டமாக சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை கடந்த 04ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது 11 நாட்கள் கடந்துள்ள போதிலும், அதிகாரிகள் இதுவரை தமது பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தத் தவறிவிட்டதாக இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply