சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச சிலம்பப் போட்டி மலேசிய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கோலாலம்பூரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணி 1 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் அடங்கலாக 11 பதக்கங்களை வென்றுள்ளது.
இதற்காக மலேசிய அரசு, வயது பிரிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து வீரர்களுக்கான விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியிருந்தது.
இந்த போட்டியில் இலங்கை சிலம்ப அணியை, இலங்கை சிலம்ப சம்மேளன பயிற்றுவிப்பாளரான ஆசான் ரா. திவாகரனும், முகாமையாளர் ஜெகதீஸ் ஆகிய இருவரும் வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.
