மொரகொட பகுதியில் ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மொரகொட ஹல்மில்லேவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபருக்குச் சொந்தமான வயலில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யானை தந்தங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் சுமார் ஒரு அடி நீளம் கொண்டவை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் சந்தேக நபர் மற்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை இன்று (15) கஹடகஸ்டிகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
