வலஸ்முல்ல – ரதனியார பகுதியில் துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ரதனியார பகுதியில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் அந்த துப்பாக்கி வெடித்து உயிரிழந்துள்ளார்.
கட்டுத்துப்பாக்கியுடன் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாயையும் அவர் தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
