புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை விமானப்படையால் முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புதுப்பித்தல் நடவடிக்கைக்கு, 424 மில்லியன் ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்டுகின்றது.

புதுப்பித்தல் நடவடிக்கையின் போது புதிய ஓய்வு அறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பேருந்து நிலையத்தில் நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply