பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கம்- அமைச்சர் ஆனந்த விஜயபால!

இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குற்றச் செயல்களின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் அடிப்படையில் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் உள்ளடங்குகின்றன.

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினர்களது என சந்தேகிக்கப்படும் சொத்துக்களே அதிகளவில் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களது சொத்துக்களை பொறுப்பேற்று பராமரிப்பதற்காக விசேட அதிகார சபையொன்றை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply