நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ். மருதனார்மடம் பகுதியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கையெழுத்து போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் இன்று (15) காலை முன்னெடுக்கப்பட்டது.
இந்த கையெழுத்துப் போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் மற்றும் யாழ். மருதனார்மடம் வர்தகர்கள், சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
