உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய மற்றொரு இளம் பெண் கைது சீகிரிய பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளையை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் மேலும் சிலருடன் சீகிரியாவுக்குச் சென்றிருந்தபோது சீகிரிய கண்ணாடி சுவரை சேதப்படுத்தும் வகையில் இந்தச் செயலைச் செய்துள்ளார்.
ஏற்கனவே, இதேபோன்று சீகிரிய கண்ணாடி சுற்றில் கிறுக்கிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
