ஹொரனை பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாக்கியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இன்று (16) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
