2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்குரிய ஒதுக்கீட்டு சட்டமூலம் சபையில் முன்வைப்பு!

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்குரிய ஒதுக்கீட்டு சட்டமூலம் செப்டம்பர் 26ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இது வரவு- செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பாகக் கருதப்படும்.

அதன்பின்னர் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்டு, அவரின் பாதீட்டு உரை இடம்பெறும். இது இரண்டாம் வாசிப்பாகக் கருதப்படும்.

வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் நவம்பர் 8 முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பாதீட்டில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு) நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதிவரை நடைபெறும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றம் வழமையாக 9.30 மணிக்கே கூடுகின்ற போதிலும், பாதீட்டு கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் காலை 9 மணிக்கு சபையை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply