களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வஸ்கடுவவைச் சேர்ந்த சம்பத் மெந்திஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் இடுந்த வேளையில், கடந்த ஜூலை 21 அன்று களுத்துறை சிறைச்சாலையில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்து காயமடைந்த நிலையில், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவரது உடல்நிலை மோசமடையவே மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (15) இரவு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது!
