யாழ். நெடுந்தீவு பகுதியில் வாள்வெட்டு- இருவர் காயம்!

யாழ். நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (16) இரவு நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

நேற்று இரவு 7.00 மணியளவில் நெடுந்தீவு மதுபானசாலையில் திடீரென புகுந்த இளைஞர் குழு, மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போது இரண்டு நபர்கள் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது பொலிஸார் மீதும் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், ஒருவர் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற ஏனையவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த வாள்வெட்டு குழுவினர் வீதியில் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply