இலங்கையில் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும்- ஜனாதிபதி!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன.

ஆனால் மீண்டும் இலங்கையில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்தார்.

ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை கட்டுமானப் பணிகள் மூலம் மட்டும் உருவாக்கப்படுவதில்லை, மாறாக பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.

முழு பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ள இத்தருணத்தில், 2026ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply