முச்சக்கர வண்டி விபத்து- 3 மாத பெண் குழந்தை பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 3 மாதங்கள் மற்றும் 23 நாட்கள் வயதுடைய பெண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரின் கைகளில் இருந்த இரு குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் பெண் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் விபத்தில் குழந்தைகளின் தாய், முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றொரு நபர் ஆகியோர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply