பாதாள உலகக் குழு உறுப்பினர்களான “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

பாதாள உலகக் குழு உறுப்பினர்களான “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

‘கஜ்ஜா’ எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், பாதாள உலகக் குழு உறுப்பினர்களான “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போதே வலஸ்முல்ல நீதிமன்ற நீதவான் குறித்த இருவரையும் டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

பாதாள உலகக் குழு உறுப்பினர்களான “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோர் கடந்த 05 ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply