மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி விவசாயிகள் தமது “இஞ்சி” பயிற்செய்கைக்கு ஏக்கருக்கு 200,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்று கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்தார்.
7 சதவீத காப்பீட்டு தவணையை செலுத்துவதன் மூலம், இயற்கை பேரழிவுகள், நோய்கள், பூச்சி சேதம் மற்றும் காட்டு யானை சேதங்களுக்கு காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும், “மஞ்சள்” பயிற்செய்கையை பாதுகாக்க ஏக்கருக்கு 700,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையைப் பெற வாய்ப்புகள் காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
