தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சருக்கு மறுப்பு- வலுக்கும் கண்டனம்!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி நேற்று (17) மூன்றாவது நாளாக நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தநிலையில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டனர்.

நேற்று (17) மாலை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த வேளையிலேயே அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டனர்.

குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் , தியாக தீபத்தின் தியாகத்தை மதித்து அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை தடுத்து நிறுத்தியமை கண்டிக்கத்தக்கது என பல தரப்பினரும் தமது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply