யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் துரைராஜா அவர்களுக்கு உருவச் சிலை ஒன்றை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
நல்லூர் பிரதேச சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்த வேளையில், தவிசாளர் மயூரன் குறித்த தீர்மானத்தை அறிவித்தார்.
உலகம் போற்றும் நேர்மையான கல்வியாளர் ஒருவரின் இனத்துக்கான அர்ப்பணிப்பு என்றும் மறக்க முடியாதது. அது வரலாறு. இந்த வரலாற்றை பதிவு செய்த மாமனிதனுக்கு உருவச்சிலை அமைப்பதில் பெருமை கொள்வதாக பிரதேச சபை உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
உருவச்சிலையை, திருநெல்வேலிச் சந்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அல்லது யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு முன்னால் உள்ள நடைபாதைக்கு அருகில் அமைக்க ஆகிய இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதில் பொருத்தமான ஒரு இடத்தை விரைவில் தெரிவு செய்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
