மின்சார சபை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி கொம்பனித் தெருவில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியின் ஒரு மருங்கில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
