யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு- நீதிமன்றின் அறிவிப்பு!

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பிலான வழக்கு இன்று யாழ். நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார்.

பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்று, வரும் ஒக்ரோபர் 01ஆம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்கான அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது.

அதன்படி ஒக்ரோபர் 01ஆம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாக இருந்தால், ஒக்ரோபர் 21ஆம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply