சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் 05 பேர் இறக்கும் அபாயம்!

நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் 05 பேர் இறக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிந்தா குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோய் தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்.

2023ஆம் ஆண்டில், நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் 1,600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

மேலும் சிறுநீரக நோயின் அறிகுறிகள் தாமதமாகி வருவதால், தொற்றா நோய்கள் உள்ளவர்கள் சிறுநீரக பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று வைத்தியர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply