பெக்கோ சமனின் மனைவி ஷாதிகாவுக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு!

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அத்துடன் அன்றைய தினம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply