உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளார்.
32 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் கணவர் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
34 வயதான அவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 12, 10 மற்றும் 5 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தாய் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளார்.
எனினும் பிள்ளைகள் தற்போது உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த தாயாரும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
