ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார்.
அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று (18) இரவு காலமானார்.
துனித் வெல்லாலகேவின் தந்தை திடீர் மாரடைப்பால் நேற்று (18) இரவு உயிரிழந்த அதேநேரம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துனித் விளையாடிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
