நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சென்னை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

தனது 46 வயதில் சிகிச்சை பலனின்றி நேற்று (18) உயிரிழந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார்.

சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா படப்பிடிப்பு தளத்தில் ரத்த வாந்தி எடுத்த ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்ற அவர் உடல் நிலை மோசமான நிலையில் உயிரிழந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு டான்ஸ் ஆடுவதில் பிரபலம் ஆகியமையால் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார்.

பின்னர் விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் ஆனார்.

சினிமாவில் மாரி, இதற்குதானே ஆசைப்பட்டாய், புலி, வாயை மூடி பேசவும் முதலான பல படங்களின் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply