டேன் பிரியசாத் கொலை சம்பவம்- துப்பாக்கிதாரி கைது!

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கேகாலை ரங்வல பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

குறிப்பிட்ட சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 12,400 சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் பல கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள் கேகாலை மற்றும் வெலிஓய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேக நபர்களில் ஒருவர் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply