வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நேற்று (18) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காணி பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையே கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போதே, பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
