ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா நாளைய (20) தினம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறை விழா கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை சனிக்கிழமை (20) காலை 9.00 மணிக்கு நடைபெறும்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு எதிரணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
