இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதுசெய்ப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு கிலோ 765 கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை நீதிமன்றி்ல ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
