ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்றைய (20) தினம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெறுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழா “ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்போம்.” – என்ற கருப்பொருளில் இம்முறை நடைபெறுகின்றது.

இந்த விழாவில் ரணில் விக்கிரமசிங்க விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு எதிரணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியின் வாழ்த்துச் செய்தியை வழங்குவதற்காகவே ரஞ்சித் மத்துமபண்டார இந்த விழாவில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply