தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டுவத்த, ஹெலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கியதில், 35 வயதுடைய மகன் உயிரிழந்தார்.
தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டமையால் இந்தக் கொலை இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தேவாலேகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
