நாட்டில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!

இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டில் இதுவரையில், 28 சிறுவர்களும் 118 பெண்களும் இணையவழி ஏமாற்றுதல் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறினார்.

எனினும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply