மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தனர்.
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு அதாவது இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் மின்சார சபைத் தலைமையகத்தில், மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபை பிரதானிகளுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் பங்கேற்றிருந்தமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் 25 அமைச்சுக்களின் செயலாளர்களும், மூன்று தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மின்சாரத் தொழிலாளர்களின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடரவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து எதிர்வரும் 24ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாகவும் மின்சார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
