சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் கைது!

எத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எத்திமலை – கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், எத்திமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவருக்குச் சொந்தமானது என்று சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply